சென்னையின் புதிய அடையாளமாக நம்ம சென்னை "Selfie Spot"

0 11590
சென்னையின் புதிய அடையாளங்களில் ஒன்றாக நம்ம சென்னை செல்ஃபி ஸ்பாட்.

சென்னையின் பெருமை மற்றும் மாண்பினை போற்றும் வகையில் காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள நம்ம சென்னை என்ற செல்ஃபி மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சென்னை மாநகராட்சி சார்பில் சீர்மிகு திட்டத்தின் கீழ் 24 லட்சம் ரூபாய் மதிப்பில் ராணி மேரி கல்லூரி எதிரில் அமைக்கப்பட்டுள்ள இந்த செல்ஃபி மையம், சென்னையின் அடையாள சின்னமாக விளங்குவதுடன், தமிழகம் மட்டுமின்றி, வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மெரினாவுக்கு வந்து செல்வதால், அதன் நினைவாக செல்ஃபி எடுத்து மகிழும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 9 கோடியே, 50 லட்ச ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ள இ-பைக் திட்டம், சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுவை குறைப்பதுடன், மின்சார சார்ஜில் இயங்கும் தன்மை கொண்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments