திரைப்பட இயக்குநர் சக்தி சிதம்பரம் மீது காவல் நிலையத்தில் பண மோசடி வழக்குப் பதிவு

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் திரைப்பட இயக்குநர் சக்தி சிதம்பரம் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் திரைப்பட இயக்குநர் சக்தி சிதம்பரம் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2011-ம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த காவலன் திரைப்படத்தை வாங்கி விநியோகம் செய்வதாக கூறி, அதில் முதலீடு செய்யலாம் ஆசை வார்த்தைக் கூறி அடையாறை சேர்ந்த சுந்தர் என்பவரிடம் ரூபாய் 23 லட்சம் பணம் பெற்று திருப்பி தரவில்லை என சக்தி சிதம்பரம் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காசோலைகள் திரும்பிவந்தது குறித்து கேட்டபோது தன்னையும் தனது குடும்பத்தாரையும் கொலை செய்து விடுவதாக சக்தி சிதம்பரம் போனில் மிரட்டியதாகவும் புகாரில் சுந்தர் கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Comments