சீர்காழியில் கொடூர இரட்டைக் கொலை சம்பவம்: டம்மி துப்பாக்கிகளை பயன்படுத்திய கொள்ளையர்கள்..!

0 8170

சீர்காழியில் நேற்று நடைபெற்ற கொடூர இரட்டைக் கொலை சம்பவத்தில் கொலையாளிகள் மிரட்டுவதற்கு பயன்படுத்தியது பொம்மை துப்பாக்கி என தெரியவந்துள்ளது.

நகைக்கடை அதிபர் தன்ராஜின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அவரது மனைவி, மகனை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு 15 கிலோ நகைகளை அள்ளிக்கொண்டு, தப்பிச் சென்றனர்.

பிறகு போலீசாரிடம் சிக்கிய கொள்ளையர்களிடம் நடைபெற்ற விசாரணையில், அவர்கள் பயன்படுத்தியது, பொம்மை துப்பாக்கி என தெரியவந்துள்ளது. ஆன்லைன் மூலம் பொம்மைத் துப்பாக்கிகளை வாங்கி, மிரட்டுவதற்கு பயன்படுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments