ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் விவாதத்திற்கு உரியது - ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட உள்ள லிண்டா தாமஸ் கருத்து

0 1726
ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் விவாதத்திற்கு உரியது - ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட உள்ள லிண்டா தாமஸ் கருத்து

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்கும் விவகாரம் விவாதத்திற்கு உரியது என ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட உள்ள லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்டு கூறியுள்ளார்.

செனட் வெளியுறவுக் குழுவில் ஆஜரான லிண்டாவிடம், இந்தியா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என நினைக்கிறீர்களா என்று செனட் குழு உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அது விவாதத்திற்கு உரிய பிரச்சனை என பதிலளித்தார்.

ஜார்ஜ புஷ், ஒபாமா, டிரம்ப் நிர்வாகங்கள், இந்தியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்த உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என வெளிப்படையாகக் கூறிவந்தன.

ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ், புதிதாக நியமிக்கப்பட உள்ள ஐ.நா. தூதரின் கருத்து அதிலிருந்து மாறுபட்ட குரலில் இருப்பதாக கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments