டெல்லி செங்கோட்டையைச் சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய காவல்படையினர் குவிப்பு

0 567
டெல்லி செங்கோட்டையைச் சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய காவல்படையினர் குவிப்பு

டெல்லி செங்கோட்டையைச் சுற்றிலும், திக்ரி எல்லையிலும் துப்பாக்கி ஏந்திய காவல்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

குடியரசு நாளில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியின்போது நிகழ்ந்த வன்முறையில் முந்நூற்றுக்கு மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர்.

செங்கோட்டையில் சீக்கியர்களின் நிசான் சாகிப் கொடி ஏற்றப்பட்டது. இதையடுத்துச் செங்கோட்டையைச் சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய காவல் படையினர் மூன்றாம் நாளாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

சாலைகளில் தடுப்புகள் ஏற்படுத்திப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

செங்கோட்டை, ஜாமா மசூதி மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. விவசாயிகள் போராட்டம் நடத்தும் திக்ரி எல்லையில் தடுப்புகள் அமைத்துள்ளதுடன் கூடுதல் காவல்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments