பெருந்தொற்று காலத்திலும் 150 நாடுகளுக்கு மருந்து வழங்கியது இந்தியா..! - இஸ்ரேல் மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

பெருந்தொற்று காலத்திலும் 150 நாடுகளுக்கு மருந்து வழங்கியது இந்தியா..! - இஸ்ரேல் மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
பெருந்தொற்று காலகட்டத்திலும் இந்தியா 150 நாடுகளுக்கு மருத்துவப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை வழங்கியதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆய்வுகளுக்கான 14 வது வருடாந்திர மாநாட்டில் காணொலி மூலம் உரையாற்றிய அவர், கொரோனாவுக்கு இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியிருந்தாலும், அண்டை நாடுகளுக்கும் அதனை வழங்கியுள்ளதைக் குறிப்பிட்ட ஜெய்சங்கர், கூட்டு முயற்சியால் மட்டுமே தொற்று நோயை வெல்ல முடியும் எனக் குறிப்பிட்டார்.
மேலும் உலகம் தற்போது டிஜிட்டல் மயமாகி உள்ளதாகக் குறிப்பிட்ட வெளியுறவுத்துறை அமைச்சர், கொரோனாவால் இந்த வேகம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Comments