தியேட்டர்களில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக பார்வையாளர்களை அனுமதிக்கலாம்.! - மத்திய அரசு

0 2160
தியேட்டர்களில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக பார்வையாளர்களை அனுமதிக்கலாம்.! - மத்திய அரசு

சினிமா தியேட்டர்களில், 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக, பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என, கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தி, மத்திய அரசு அறிவித்துள்ளது.

நீச்சல் குளங்களில், அனைத்து வயதினரும் குளிக்கலாம் என்றும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும், பெரும்பாலான தளர்வுகளுடன், கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது.

இதனை, பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, மேலும் பல தளர்வுகளையும் அறிவித்துள்ளது. பிப்ரவரி ஒன்றாம் தேதி, முதல், பொதுமக்களும் கண்காட்சிக்குச் சென்று பார்வையிடலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இருப்பினும், இந்த தளர்வுகளை, அப்படியே நடைமுறைப்படுத்துவதா? அல்லது சூழலுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை தொடரலாமா? என்பதை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்றும், மத்திய அரசு வழிகாட்டியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments