சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தி, கண்காணிக்க உத்தரவிடக் கோரி வழக்கு... FACEBOOK, YOUTUBE, GOOGLE நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டிஸ்

0 3411
சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தி, கண்காணிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் பேஸ்புக், யூ-டியூப், கூகுள் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மூக வலைதளங்களை கட்டுப்படுத்தி, கண்காணிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், FACEBOOK, YOUTUBE, GOOGLE நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான பொதுநல மனு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சமூக வலைதளங்கள் தங்களுக்கான தணிக்கையை தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், புகார்கள் வந்தால் மட்டுமே, நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, பேஸ்புக், யூ-டியூப், கூகுள் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வார காலத்திற்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments