பிரான்சிலிருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா புறப்பட்டன..!

0 2109
பிரான்சிலிருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா புறப்பட்டன..!

பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா புறப்பட்டன.

பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை 59 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் 2016 ஆம் ஆண்டு கையெழுத்தானது. அதில் இரண்டு கட்டமாக 8 ரபேல் விமானங்கள் ஏற்கனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன.

இந்த நிலையில் மேலும் 3 விமானங்கள் பிரான்சில் இருந்து புறப்பட்டு, இடையில் எங்கும் நிற்காமல் வியாழக்கிழமை இந்தியா வந்தடைகின்றன. நடுவானில் எரிபொருள் நிரப்புவதற்காக ஐக்கிய அரபு அமீரக விமானப் படையின் டேங்கர் விமானம் உதவி செய்ய இருக்கிறது.

மேலும் 3 விமானங்கள் இணைய இருப்பது இந்திய விமானப்படைக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று பிரான்சிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments