ஓசூர் முத்தூட் நிறுவனத்தில் கொள்ளையடித்த 7 பேரை 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி

0 2458
ஓசூர் முத்தூட் நிறுவனத்தில் கொள்ளையடித்த 7 பேரை 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி

சூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் நகைக் கொள்ளையில் ஈடுபட்டு கைதானவர்களை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 22ஆம் தேதி முத்தூட் நிறுவனத்துக்குள் புகுந்த கொள்ளையர்கள், துப்பாக்கியைக் காட்டி மிரட்டி 7 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

போலீசார் எடுத்த துரித நடவடிக்கை காரணமாக கொள்ளையர்கள் தெலுங்கானாவில் வைத்து கைது செய்யப்பட்டனர். ஓசூர் அழைத்து வரப்பட்ட கொள்ளையர்கள் 7 பேரையும் இரண்டாவது நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

கொள்ளையர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் 12 நாட்கள் அனுமதி கோரிய நிலையில், 10 நாட்கள் அனுமதி கொடுத்து நீதிபதி உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments