விவசாயிகளுக்கு ஆதரவாக அரியானா சட்டமன்ற உறுப்பினர் அபய் சிங் சவுதாலா பதவி விலகல்

0 2051
விவசாயிகளுக்கு ஆதரவாக அரியானா சட்டமன்ற உறுப்பினர் அபய் சிங் சவுதாலா பதவி விலகல்

ரியானாவில் இந்திய தேசிய லோக் தளக் கட்சியின் அபய் சிங் சவுதாலா விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துச் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

முன்னாள் துணைப் பிரதமர் தேவிலாலின் பேரனும், முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மகனுமான அபய் சிங் எல்லனாபாத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியும், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

டிராக்டரிலேயே அரியானா சட்டமன்றத்துக்கு வந்த அபய் சிங், பதவி விலகல் கடிதத்தை அளித்தார். அவரது பதவி விலகலை ஏற்றுக்கொண்டதாகப் பேரவைத் தலைவர் ஞான் சந்த் குப்தா அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments