டிராக்டர் போராட்டத்தைக் களங்கப்படுத்த அரசு அனுப்பிய நபர் தீப் சித்து - விவசாய சங்கத் தலைவர்

0 2054
டிராக்டர் போராட்டத்தைக் களங்கப்படுத்த அரசு அனுப்பிய நபர் தீப் சித்து - விவசாய சங்கத் தலைவர்

டிராக்டர் பேரணியின்போது நிகழ்ந்த வன்முறையை தொடர்ந்து டெல்லி செங்கோட்டையில் நிசான் சாகிப் கொடியை ஏற்றியதை நடிகர் தீப் சித்து ஒப்புக்கொண்டுள்ளார்.

பஞ்சாபி நடிகர் தீப் சித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சன்னி தியோலுக்கு நெருக்கமாக இருந்தவர். நேற்று டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் கலந்துகொண்ட தீப் சித்து செங்கோட்டையில் நிசான் சாகிப் கொடியை ஏற்றி ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத், பாஜகவைச் சேர்ந்த தீப் சித்து அமைதிப் போராட்டத்தைக் களங்கப்படுத்த அரசால் அனுப்பப்பட்டவர் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments