கொப்பரை தேங்காய் கொள் முதல் விலையை உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்

0 2705
கொப்பரை தேங்காய் கொள் முதல் விலையை உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கொப்பரை தேங்காயின் குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 375 ரூபாய் வரை உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு பருவ காலத்தில் 100 கிலோ எடை கொண்ட ஒரு குவிண்டால் அரவை கொப்பரை தேங்காய் விலை 9 ஆயிரத்து 960 ரூபாயில் இருந்து 10 ஆயிரத்து 335 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

அதே போன்று பந்து கொப்பரை தேங்காய் விலை குவிண்டாலுக்கு 300 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு 52 சதவீதம் முதல் 55 சதவீதம் வரை வருவாய் கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments