டொனால்டு டிரம்ப் யூடியூப் கணக்கு நிரந்தரமாக முடக்கம்..! டுவிட்டரை தொடர்ந்து யூடியூப் நிறுவனமும் அதிரடி

டொனால்டு டிரம்ப் யூடியூப் கணக்கு நிரந்தரமாக முடக்கம்..! டுவிட்டரை தொடர்ந்து யூடியூப் நிறுவனமும் அதிரடி
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் யூடியூப் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் முன் ஏற்பட்ட கலவரத்திற்கு டிரம்ப்பின் சமூக வலைத்தள பதிவுகளே காரணம் என குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட நிலையில், அவரின் சமூக வலைத்தள பக்கங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டன.
வன்முறையை தூண்டும் விதம் தொடர்ந்து பதிவிடுவதாக டுவிட்டர் நிறுவனம் அவரது கணக்கை நிரந்தரமாக முடக்கியது. இதனைதொடர்ந்து யூடியூப் நிறுவனமும் தற்போது டிரம்ப்பின் கணக்கை நிரந்தரமாக முடக்கியுள்ளது.
Comments