சினிமா பாணியில் விரட்டிச் சென்று 180 தமிழக மீனவர்களை நடுக்கடலில் சிறைபிடித்த ஆந்திர மீனவர்கள்

0 2140
சினிமா பாணியில் விரட்டிச் சென்று 180 தமிழக மீனவர்களை நடுக்கடலில் சிறைபிடித்த ஆந்திர மீனவர்கள்

ந்திர மாநிலம் நெல்லூர் அருகே நடுக்கடலில் 180 தமிழக மீனவர்களை சினிமா பாணியில் விரட்டிச் சென்று ஆந்திர மீனவர்கள் சிறைபிடித்துள்ளனர்.

இசக்கபள்ளி கிராமத்தை ஒட்டியுள்ள ஆழ் கடல் பகுதியில் தமிழகத்தை சேர்ந்த சுமார் 180 மீனவர்கள், 15 படகுகளில் மீன் பிடிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. எல்லை தாண்டி தங்கள் பகுதிக்கு வந்ததாகக் கூறி, இசக்கப்பள்ளி மீனவர்கள் தமிழக மீனவர்களை சினிமா பாணியில் விரட்டி சிறை பிடித்தனர்.

தமிழக மீனவர்களை கரைக்கு அழைத்துச் சென்ற ஆந்திர மீனவர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தமிழக மீனவர்களை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments