நெல்லையில் சசிகலா விடுதலையை வரவேற்று போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி பதவி பறிப்பு

0 5318
நெல்லையில் சசிகலா விடுதலையை வரவேற்று போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி பதவி பறிப்பு

சிகலா விடுதலையை வரவேற்கும் விதமாக போஸ்டர் ஒட்டிய நெல்லை மாவட்ட அதிமுக நிர்வாகி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளராக பதவி வகித்து வந்த சுப்ரமணியராஜா, அ.இ.அ.தி.மு.க.வை வழிநடத்த வருகை தரும் பொதுச்செயலாளர் அவர்களே வருக வருக என சசிகலாவை வரவேற்று ஓபிஎஸ், இபிஎஸ் புகைப்படங்களுடன் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்.

இதனை அடுத்து அவரை அதிமுக அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி கட்சித் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கட்சியின் கொள்கைக்கு எதிராகவும், அவப்பெயர் உண்டாக்கு விதத்தில் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments