பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி... கொல்கத்தா அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி... கொல்கத்தா அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
பிசிசிஐ தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான செளரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2ஆம் தேதி, லேசான மாரடைப்பு காரணமாக, கொல்கத்தாவில் உள்ள உட்லாண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கங்குலிக்கு, ஆன்ஜியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது.
இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள வீட்டில் ஓய்வில் இருந்தார். இந்நிலையில், நள்ளிரவில் நெஞ்சுவலிப்பதாக, கங்குலி கூறியதைத் தொடர்ந்து, கொல்கத்தாவில் உள்ள அப்போலோ மருத்துவமனையின், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Comments