இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி... சென்னை வந்தடைந்தனர் இந்திய வீரர்கள்

0 4658
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி... சென்னை வந்தடைந்தனர் இந்திய வீரர்கள்

சென்னையில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் சென்னை வந்தடைந்தனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு விமான மூலம் சென்னை வந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் மந்தைவெளியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து அணி வீரர்கள் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும், இந்திய வீரர்கள் 3 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் விராட் கோலி மும்பையில் இருந்து விமானம் மூலம் இரவு சென்னை வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments