நிரம்பி வழியும் இந்தோனேசியா மருத்துவமனைகள்...நோயாளிகள் இறக்கும் அவலம்

0 1450

இந்தோனேசியாவில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் , மருத்துமவமனைகள் நிரம்பி வருகின்றன . இதனால் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் அனுமதி நிராகரிக்கப் படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா பெருந்தொற்று பரவ தொடங்கி ஒரு ஆண்டிற்கு மேல் ஆகியும், அதன் வீரியும் குறையவில்லை. பல உலக நாடுகளும் கொரோனா பாதிப்பிலிருந்து மீள வழியில்லாமல் தவித்து வந்த நிலையில் தான் புதிய வகை கொரோனா பரவத்தொடங்கியது

இந்தோனேசியாவில் நாளொன்றுக்கு 40 ,௦௦௦ முதல் 50 ,௦௦௦ வரை கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் 30 சதவீதம் பேர் கொரோனவால் பாதிக்கப்படுகின்றனர்.தற்போது இந்தோனேசியாவில் ஒரு மில்லியன்  மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள  நிலையில், இதுவரை 28,468 பேர் கொரோனா தொற்றினால்  உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தோனேசியா மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகள் கடந்த 6 மாதங்களாக 90 முதல் 100 சதவீதம் வரை நிரம்பி வழிகின்றன.

இதனால், மிக மோசமான நிலையில் நோயாளிகள் வந்தாலும், இட பற்றாக்குறை காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.கொரோனா நோயாளிகள் மட்டுமின்றி பிற நோயாளிகளும் இதனால் அவதிப்பட்டு வருகின்றனர்.

நோயாளிகள் மருத்துவமனைகளில் நிராகரிக்கப்படுவதால், அவர்கள் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


பெருகிவரும்  கொரோனா நோய் தொற்றால், மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் பணி சுமை அதிகரித்து வருவதாகவும் அங்குள்ள மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, சீனாவின் சினோவாக் தடுப்பூசி போடும் பணியை இந்தோனேசியா  ஜனவரி 13 ஆம் தேதி துவங்கியது. 18 முதல் 59 வயதுள்ள மக்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும் என்று இந்தோனேசியா அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments