மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் வீழ்ச்சி, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதே சரிவுக்குக் காரணம்

மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் நானூறு புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்தது.
மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் நானூறு புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்தது.
இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் இருந்தே இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.
பகல் பத்தரை மணிக்கு மும்பை பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 444 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 47ஆயிரத்து 903 ஆக இருந்தது.
தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு நிப்டி 124 புள்ளிகள் சரிந்து 14 ஆயிரத்து 115 ஆக இருந்தது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளைப் பெருமளவில் விற்றதே பங்குச்சந்தை வீழ்ச்சிக்குக் காரணம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments