டெல்லி செங்கோட்டையைச் சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய படையினர் பாதுகாப்பு; வன்முறை தொடர்பாக 22 வழக்குகள் பதிவு

0 2786
டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியின்போது நிகழ்ந்த வன்முறையில் காவல்துறையினர் 86 பேர் காயமடைந்துள்ளனர்.

டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியின்போது நிகழ்ந்த வன்முறையில் காவல்துறையினர் 86 பேர் காயமடைந்துள்ளனர்.

வன்முறை தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்று வன்முறை மூண்டதால் டெல்லி செங்கோட்டை, ஜாமா மசூதி மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

செங்கோட்டையைச் சுற்றியுள்ள சாலைகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய படையினர் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல் அரியானா எல்லையில் சிங்கு, திக்ரி ஆகிய இடங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாபில் இருந்து டெல்லி வழியாக உத்தரப்பிரதேசத்துக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments