ரஷ்யாவில் பனியாக உறைந்து போன கடலில் சிக்கிய மீனவர்கள் மீட்பு

ரஷ்யாவில் பனியாக உறைந்து போன கடலில் சிக்கிய மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
ரஷ்யாவில் பனியாக உறைந்து போன கடலில் சிக்கிய மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு அருகே உள்ள பின்லாந்து வளைகுடா பகுதியின் கடும் குளிர் காரணமாக அப்பகுதியில் உள்ள கடல் பனியாக உறைந்து போனது.
இதில் ஏராளமான மீனவர்கள் சிக்கித் தவித்து வந்தனர். இந்நிலையில் அவர்களை மீட்பதற்காக பனிக்கட்டியை உடைத்துச் செல்லும் கப்பல் அனுப்பி வைக்கப்பட்டது.
அப்போது கப்பல் கட்டுப்பாட்டை இழந்து வேகமாகச் சென்றதைக் கண்ட மீனவர்கள் அங்கிருந்து ஓடிச் சென்று தப்பினர்.
பின்னர் நீரிலும், நிலத்திலும் செல்லக்கூடிய ஹோவர்கிராஃப்ட் என்ற படகு மூலம் மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
Comments