மனைவியின் நகை ஆசை கொலையாளியான கணவன்..! நகையால் பறிபோன உயிர்

0 8795
ஈரோட்டில் தங்கத்தில் தாலி வாங்கித் தரச்சொல்லி மனைவி அடம் பிடித்ததால், உடன் பணிபுரிந்த பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்து தங்க சங்கிலியை பறித்துச்சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஈரோட்டில் தங்கத்தில் தாலி வாங்கித் தரச்சொல்லி மனைவி அடம் பிடித்ததால், உடன் பணிபுரிந்த பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்து தங்க சங்கிலியை பறித்துச்சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஈரோடு வ.உசி.பூங்கா பின்புறம் உள்ள மிட்டாய்க்கார தெருவை சேர்ந்தவர் ரேகா இவர் ரமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சேலம் பனைமரத்துப்பட்டியில் வசித்து வந்தார். சம்பவத்தன்று தனது தாய் வீட்டருகே உள்ள தனது தோழியின் புதுமனை புகுவிழாவுக்கு சென்றுள்ளார்.

இந்த விழாவுக்கு சென்று விட்டு, தனது தாய் வீட்டில் தனியாக இருந்த நிலையில் அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமி அவரது கழுத்தை அறுத்து கொலை செய்து கழுத்தில் கிடந்த ஐந்தரை சவரன் தாலி சங்கிலியை பறித்துச்சென்றான்.

ரத்தகறை படிந்த பேண்டுடன் மர்ம நபர் தப்பிச்சென்ற தகவல் கிடைத்து விரைந்து வந்த காவல்துறையினர் மோப்ப நாய வரவழைத்தனர். ரேகாவின் சடலத்தை கைப்பற்றி பிணகூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். அவரது வீட்டில் இருந்து அக்கம் பக்கத்தில் பொறுத்தப்பட்ட 400 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இதில் இரு சக்கரவாகனத்தில் தப்பிச் சென்ற கொலையாளியை அடையாளம் கண்டனர். இதையடுத்து ரேகாவுடன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக ஜவுளிக்கடையின் ஒன்றாக வேலைபார்த்த செந்தில்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் அடகு வைத்த ஐந்தரை சவரன் நகையும் மீட்கப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொரூர சம்பவத்தின் பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது. ரேகாவுடன் பணிபுரிந்த நாட்களில், இருவருக்குமிடையே நெருங்கி நட்பு இருந்ததால் செந்தில்குமாருக்கு அவ்வபோது ரேகா பணம் கொடுத்து உதவி வந்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் பணம் ஏதும் கொடுத்து உதவவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில் புதுமனை புகுவிழாவுக்கு தனது மனைவியுடன் சென்ற செந்தில் குமார், தனது தோழிகள் மற்றும் நண்பர்களின் குடும்பத்தை தனது மனைவிக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அப்போது அவர்கள் அனைவரும் கழுத்தில் தங்கத்தில் தாலி அணிந்திருந்ததாக கூறப்படுகின்றது.

விழாவுக்கு சென்று விட்டு வந்ததும், செந்தில்குமாரிடம் இதை சுட்டிக்காட்டி அவரது மனைவி கேவலமாக திட்டியதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து ஆத்திரத்தில் பைக்கில் ரேகாவின் வீட்டிற்கு சென்றுள்ளான் செந்தில்குமார், ரேகாவின் குழந்தையை அழைத்துக் கொண்டு தாய் கடை வீதிக்கு சென்று விட , வீட்டில் ரேகா மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது தனது மனைவிக்கு தங்கத்தில் நகை வாங்கிக் கொடுக்க வேண்டும் அதனால் தனக்கு பணம் கொடுத்து உதவும் படி கோரிக்கை விடுத்துள்ளான்.

ஆனால் அவர் தன்னிடம் பணம் ஏதும் இல்லை என்று கூறியதால் அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பிடித்து இழுத்துள்ளான். அவர் கொடுக்க மறுத்ததல் கத்தியால் கழுத்தை அறுத்து நகையை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றுள்ளான் செந்தில் குமார் என்றும் இந்த சம்பவத்தில் கொலையாளியை பிடிப்பதற்கு சிசிடிவி கேமராக்கள் பேருதவியாக இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்

விரைவாக துப்புதுலக்கிய தனிப்படை காவல்துறையினரை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

பொறுப்புள்ள மனைவி நினைத்தால் சாதாரண கணவனை சாதனையாளனாக்க முடியும், அதே நேரத்தில் பொறுப்பற்ற வார்த்தைகளை உதிர்க்கும் மனைவியால் என்னமாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments