அப்பாலே போ.. அருள்வாக்கு ஆயாவே..! பைப் கனெக்ஷன் பஞ்சாயத்து

0 5509
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே பக்கத்து வீட்டிற்கு பைப் லைன் கொடுப்பதை தடுத்த மூதாட்டி ஒருவர், சமாதானம் பேசச் சென்ற போலீசாரை சாமியாடித் தடுத்து நிறுத்தி, அருள்வாக்கால் மிரளச்செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பக்கத்து வீட்டிற்கு பைப் லைன் கொடுப்பதை தடுத்த மூதாட்டி ஒருவர், சமாதானம் பேசச் சென்ற போலீசாரை சாமியாடித் தடுத்து நிறுத்தி, அருள்வாக்கால் மிரளச்செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வடக்கு கைலாசபுரத்தில் டியூப் மூலம் வீடுதோறும் குடிநீர் வழங்கும் திட்டத்திற்காக புதிய இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

வீட்டுக்கு 1500 ரூபாய் பெற்றுக் கொண்டு சொந்த வீடு இருப்பவர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இடையே இருந்த முன்பகையால், ஆத்திரம் அடைந்த மூதாட்டி ஒருவர் தனது நிலத்து வழியாக பக்கத்து வீட்டிற்கு குடிநீர் டியூப் செல்லக்கூடாது என்று எதிர்த்து பணிகளைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகின்றது.

இதையடுத்து உதவி ஆய்வாளர் எபினேசர் தலைமையிலான போலீசார் அந்த மூதாட்டியிடம் சமாதானம் பேச சென்றனர். அடுத்த நொடியே தலைவிரிகோலத்துடன் உக்கிரமாக மாறி சாமி ஆடினார் அந்த மூதாட்டி..!

தான் சுடலை மாடன் என்றும் தனது நிலத்திற்குள் கால்வைத்தால் தூக்கிவிடுவேன் என்பது போலவும் கூச்சலிட்டதால், அவரது வீட்டு எல்லைக்குள் நுழையாமல், எல்லைக்கல் அருகே தயக்கத்துடன் நின்றனர் காவல் துறையினர்...

உதவி ஆய்வாளர் எபினேசர், சாமர்த்தியமாக அந்த பெண்ணின் பணப்பை கீழே கிடப்பதாக கூற ஆயாவின் உக்கிரம் மெல்ல தணிந்தது. பின்னர் மற்றொரு பெண் வந்து அவரை கைத்தாங்கலாக அழைத்துச்சென்று அங்கிருந்த வேப்ப மரத்தில் சாய்த்து விட்டு வந்தார்.

இதையடுத்து போலீசார், அக்கம் பக்கத்தினர், குடிநீர் இணைப்பை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தினர். அதன் தொடர்ச்சியாக அந்த பகுதியில் டியூப் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.

30 வருடங்களுக்கு முன்பு இரும்பில் போடப்பட்ட குடிநீர் குழாய், பின்னர் பிவிசி குழாய்க்கு மாறி, தற்போது வீடு தோறும் டியூப்பில் தண்ணீர் கொடுக்கும் நிலைக்கு மாறியுள்ளது. இருந்தாலும் இந்த பகுதிகளில் வீடுகளுக்கு குடிநீர், டியூப்பில் சரிவர நீர்வரத்து இல்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்..!

அண்டை மாநிலத்தில் இருந்து நீர் தரமறுக்கிறார்கள் என்கிறோம். ஆனால், இங்கே பக்கத்து வீட்டுக்கு குடிநீர் இணைப்பு கொடுப்பதற்கே காவல்துறை வந்து மத்தியஸ்தம் செய்ய வேண்டி உள்ளது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments