இன்று பிற்பகலுக்குள் சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா

சிறைத் தண்டனை நிறைவு பெற்ற சசிகலா இன்று பிற்பகலுக்குள் அதிகாரப்பூர்வமாக பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார்.
சிறைத் தண்டனை நிறைவு பெற்ற சசிகலா இன்று பிற்பகலுக்குள் அதிகாரப்பூர்வமாக பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார்.
தற்போது மருத்துவமனையில் கொரோனாவில் இருந்து மீண்டு சிகிச்சை பெற்று வரும் அவர் மருத்துவர்களின் ஆலோசனையின்படி சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.
சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் நேற்று சிறை அதிகாரிகளை சந்தித்து சசிகலா விடுதலைக்கான ஆவணங்களை ஒப்படைத்து சிறை விதிகளை பூர்த்தி செய்தார்.
சசிகலா விடுதலை செய்யப்பட்ட போதும் மருத்துவமனையில் இருந்து சென்னைத் திரும்பும் வரை அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் பெங்களூர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments