திருப்பூர் : அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மூவருக்கு கொரோனா

0 6755

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே முத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அப்பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 22 , 23 , 24 ஆகிய தேதிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 12ஆம் வகுப்பைச் சேர்ந்த 2 மாணவர்கள் மற்றும் ஒரு மாணவிக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. பள்ளி முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு, அந்த 3 மாணவர்கள் பயன்படுத்திய வகுப்பறைகள் ஒரு வார காலத்திற்கு மூடி வைக்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments