அயோத்தியில் மசூதி கட்டுவதற்கான பணிகள் ஆரம்பம் -இஸ்லாமிக் கல்ச்சுரல் பவுண்டேசன்

0 1114
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் மசூதி கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் மசூதி கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

ராமஜென்ம பூமியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தானிப்பூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தில் மசூதி கட்டப்படுகிறது.

கட்டுமானப் பணி மேற்கொள்ளும் இன்டோ இஸ்லாமிக் கல்ச்சுரல் பவுண்டேசன் அறக்கட்டளையை சேர்ந்தவர்கள், காலையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரக்கன்று நட்டனர்.

மண் பரிசோதனை தொடங்கி இருப்பதால், மசூதி கட்டுவதற்கான தொழில்நுட்ப பணிகள் தொடங்கி விட்டதாக கூறலாம் என்று அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர். விரைவில் நன்கொடை திரட்டி கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments