“இந்த ஆட்சி எவ்வளவு கேவலமா இருக்குனு பாருங்க” - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது என பாருங்கள் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மேடையில் பேசியது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது என பாருங்கள் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மேடையில் பேசியது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் திண்டுக்கலில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மேடையில், திமுகவை பற்றி விமர்சித்துக் கொண்டிருந்தார்.
பேச்சுவாக்கில், இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது என அதிமுக ஆட்சியை குறிப்பிடும் வகையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறியதால், சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
Comments