மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம்

0 1956
மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரை ஒட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரை ஒட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வரும் 29ஆம் தேதி இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.

இதனை முன்னிட்டு நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தமிழகத்திற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை கேட்டுப் பெறுவது குறித்தும், இலங்கை கடற்படையால் பாதிக்கப்படும் தமிழக மீனவர்களின் பிரச்சனைகள் குறித்தும் நிவர்,புரெவி புயல் பாதிப்புகளுக்கு மத்திய நிவாரணத் தொகையை விரைவாக வழங்கக் கோரியும் கேள்விகள் எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments