தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பேராசிரியர் மீது ஐ.ஐ.டி. நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை - மாணவி குற்றச்சாட்டு

தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பேராசிரியர் மீது ஐ.ஐ.டி. நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட ஐ.ஐ.டி. ஆராய்ச்சி மாணவி குற்றம்சாட்டியுள்ளார்.
சிவில் துறையைச் சேர்ந்த பேராசிரியர் மாதவ குமார் என்பவர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆராய்ச்சி மாணவி ஒருவர், ஐஐடி நிர்வாகத்தில் உள்ள பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்கும் CCASH கமிட்டியிடம் கடந்தாண்டு ஆதாரங்களுடன் புகார் அளித்திருந்தார்.
கமிட்டி விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து, பேராசிரியர் மாதவ குமாரை உதவிப் பேராசிரியராக பதவிறக்கம் செய்வது, 5 ஆண்டுகளுக்கு மாணவிகளுக்கு பாடம் எடுக்கக்கூடாது என்பன உள்ளிட்ட 4 பரிந்துரைகளை ஐஐடி நிர்வாகத்திற்கு CCASH கமிட்டி முன்வைத்தது.
இதனை ஐஐடி நிர்வாகமும் ஏற்றுக் கொண்ட நிலையில், தற்போது வரை பேராசிரியர் மாதவ குமார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவி குற்றம்சாட்டுகிறார்.
Comments