நள்ளிரவில் பெண்களைக் கட்டிப்போட்டு 135 சவரன் தங்க நகை, ரூ. 12 லட்சம் ரொக்கப்பணம் திருட்டு: மாஸ்க் திருடனுக்கு வலை வீச்சு

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே வீட்டின் பீரோவிலிருந்த 135 சவரன் தங்க நகைளும் மற்றும் 12 லட்ச ரூபாயும் ரொக்கப்பணமும் திருட்டுப்போனது.
பரவை பகுதியில், காய்கறி வியாபாரி சாமுவேல் என்பவரது வீட்டில் நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர், வீட்டில் இருந்த 2 பெண்களின் கைகளைக் கட்டிப் போட்டு திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. புகாரின் பேரில் மாஸ்க் அணிந்து வந்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments