சட்டப்பேரவைத் தேர்தலிலும், திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெறும் - வைகோ

வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும், திமுக கூட்டணியில் தான் மதிமுக இடம்பெறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில், மதிமுக சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தனை இடம் கிடைக்கும் என்பதை விட, எந்த லட்சியத்திற்காக போராடுகிறோம் என்பதை கருத்தில் கொள்ளுமாறு தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
Comments