கஞ்சா போதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை: செல்போன் சிக்னல் மூலம் போலீசில் சிக்கிய கொலையாளிகள்

0 1144
பெங்களூரில் கஞ்சா போதையில் வாலிபர் கொலை : சேலத்தில் பதுங்கியிருந்த 2 கொலையாளிகள் கைது

பெங்களூருவில், கஞ்சா போதையில் இளைஞரை கொன்று விட்டு, சேலம் அருகே உணவகத்தில் பணியாற்றி வந்த கொலையாளிகளை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 12 ஆம் தேதி, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பவித்ரன், பெங்களூருவில், பலத்த காயங்களுடன் பிணமாகக்கிடந்தார்.

இறந்து போனவரின் செல்போன் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே சிக்னல் காட்டுவதை கண்டறிந்த பெங்களூரு போலீசார், சேலம் போலீசாருடன் இணைந்து தேடுதலில் ஈடுபட்டபோது, சந்தைபேட்டையில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வந்த 2 அசாம் மாநில இளைஞர்களை கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில், அவர்கள் பவித்ரனின் நண்பர்கள் என்பதும், போதையில் ஏற்பட்ட தகராறில் பவித்ரனை கொன்றதும் தெரிய வந்தது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments