பனிச்சறுக்கு வீரரை துரத்திய கரடி - வைரலாகும் வீடியோ

0 1211
பனிச்சறுக்கு வீரரை துரத்திய கரடி - வைரலாகும் வீடியோ

ருமேனியாவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த நபரை கரடி ஒன்று துரத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.

கடந்த ஞாயிறன்று அங்குள்ள Predeal ski resortல் இளைஞர் ஒருவர் ஆர்வத்துடன் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கரடி ஒன்று அவரை துரத்த ஆரம்பித்தது. இதனைக் கண்ட அந்த இளைஞர் முன்னிலும் வேகமாக பனிச்சறுக்கு செய்த படி அங்கிருந்து வெளியேறினார்.

இக்காட்சியை David Creta என்ற மற்றொரு பனிச்சறுக்கு இளைஞர் படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments