துருவ் ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து

ராணுவத்துக்குச் சொந்தமான துருவ் எனும் நவீன ஹெலிகாப்டர் ஒன்று ஜம்முகாஷ்மீரின் கத்துவா அருகே விழுந்து நொறுங்கியது.
அதில் பயணம் செய்த இரண்டு விமானிகளில் ஒருவர் உயிரிழந்தார். இன்னொரு விமானி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துருவ் ஹெலிகாப்டர் அங்குள்ள மின்சார ஒயர்களில் சிக்கி தரையிறக்க முயன்றபோது நொறுங்கியதாக விபத்தை நேரில் பார்த்த சிலர் தெரிவித்தனர்.
Comments