இந்தியா சீனா ராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என இருதரப்பினரும் கூட்டறிக்கை

0 584
இந்தியா சீனா ராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என இருதரப்பினரும் கூட்டறிக்கை

இந்தியா சீனா ராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான பத்தாவது சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்று இருதரப்பினரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு இருநாட்டு ராணுவ கமாண்டர்கள் இடையிலான 9வது சுற்றுப் பேச்சுவார்த்தை சீன எல்லையில் உள்ள மோல்டோவில் நடைபெற்றது.

சுமார் 15 மணி நேரம் இந்தப் பேச்சுவார்த்தை நீடித்தது. இதில் இருதரப்பினரிடையை படைக்குறைப்பு குறித்து சுமுகமான உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாகவும் நடைமுறைக்கு சாத்தியமான முறையிலும் இருந்ததாக இருநாட்டு ராணுவத்தினரும் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடிய விரைவில் பத்தாவது சுற்று பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments