நம்ம ஊரு ஜாக்சன் துரை காலமானார்..!
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரை வேடத்தில் நடித்த பழம்பெரும் நடிகர் சி.ஆர் பார்த்திபன் வயது மூப்பு காரணமாக தனது 90 ஆவது வயதில் காலமானார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிவாஜியுடன் சரி நிகராக நின்று கொக்கரிக்கும் பிரிட்டிஷ் அதிகாரி ஜாக்சன் துரை கதாபாத்திரத்தில் நடித்தவர் பழம்பெரும் நடிகர் C.R. பார்த்திபன்...!
90 வயதிலும் ஞாபக சக்தியுடன் திகழ்ந்த சி.ஆர்.பார்த்திபன், வயது மூப்பு காரணமாக திங்கட்கிழமை மாலையில் காலமானார்.
சிவாஜி கணேசனுடன் 16 படங்கள், எம் ஜி ஆருடன் 10 படங்கள் உட்பட 120 படங்கள் வரை நடித்துள்ள பார்த்திபன் பெரும்பாலும் நீதிபதி மற்றும் போலீஸ் அதிகாரியாக நடித்து மக்களை கவர்ந்தவர். பிற்காலத்தில் பிரபு நடித்த கோழிக்கூவுது படத்தில் அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே என்ற பாடலுக்கு நடித்ததால் பட்டி தொட்டியெல்லாம் அறியப்பட்ட முதியவரானார் சி.ஆர். பார்த்திபன்
சி.ஆர் பார்த்திபன் அரசியல் கட்சிகளில் இல்லாவிட்டாலும், காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என 5 முதல் அமைச்சர்களுடன் நட்பு பாராட்டியவர் என்பது குறிப்பிடதக்கது.
Comments