சீன ராணுவத்துடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாகவும், நேர்மறையாவும் இருந்ததாக இந்திய ராணுவம் தகவல்

லடாக் எல்லைப் பிரச்சனை தொடர்பாக சீன ராணுவத்துடன் நடத்தப்பட்ட 9வது சுற்றுப் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாகவும், நேர்மறையாவும் இருந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஞாயிறன்று இருதரப்பு ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் நடைப்றற பேச்சுவார்த்தை குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய ராணுவம், இருதரப்பு புரிதல் மற்றும் நம்பிக்கையை இந்த சந்திப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
முன்களத்தில் இருக்கும் வீரர்களை விரைவில் விலக்குவதற்கு இருதரப்பிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.
எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதிகளில் கட்டுப்பாடுகளுடன், அமைதியைப் பேணவும், ராணுவ கமாண்டர்கள் இடையே 10வது சுற்றுப் பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்குவதற்கும் முடிவு செய்யட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
Comments