விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும்: அமைச்சர் நரேந்திரசிங் தோமர் நம்பிக்கை

0 1455

3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், ஜனநாயகத்தில் தங்களுக்கு எதிரான விவகாரத்தில் போராட்டம் நடத்துவதற்கு அனைவரும் உரிமை உண்டு என்றார். வேளாண் சட்டங்களை எதிர்த்து குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகளே போராட்டம் நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவதற்கு, குடியரசு தினத்திற்குப் பதில், மற்றொரு நாளை விவசாயிகள் தேர்வு செய்திருக்கலாம் என்றும் நரேந்திரசிங் தோமர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments