தவணை முறையில் பணத்தை வசூலித்து நிலமாக தருவதாக கூறி மோசடி: டிஸ்க் அசெட்ஸ் லீட் நிறுவனத்திற்கு சொந்தமான 207 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து முடக்கம்

0 1960

தமிழகத்தில் தவணை முறையில் பணத்தை வசூலித்து நிலமாக தருவதாக கூறி 1100 கோடி ரூபாய் மோசடி செய்த டிஸ்க் அசெட்ஸ் லீட்  நிறுவனத்திற்கு சொந்தமான 207 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 

வாடிக்கையாளர்களிடம் வசூலித்த பணத்தை உறவினர்கள் பெயரில் பரிமாற்றம் செய்ததும், சொத்துக்கள், நிலம் வாங்கி இருப்பதையும், அமலாக்கத் துறையினர் விசாரணையில் உறுதி செய்துள்ளனர்.

இதனையடுத்து நிறுவனத்தின் இயக்குனர்கள் உமாசங்கர் ,அருண்குமார், ஜனார்த்தனன், சரவண குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான மதுரை, ராமநாதபுரம், சென்னை ஆகிய இடங்களில் இருந்த 3850 ஏக்கர் பரப்பளவில் உள்ள சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments