அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம்: முதல் பரிசு யாருக்கு என்பதை விழா கமிட்டியே முடிவு செய்யும் - கோட்டாட்சியர்

0 11817

லங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் முதல் பரிசு பெற்றவர் ஆள்மாறாட்டம் செய்தது உறுதியானதை அடுத்து, முதல் பரிசை யாருக்கு வழங்குவது என்பதனை விழா கமிட்டியே முடிவு செய்யும் என வருவாய் கோட்டாட்சியர் கூறியுள்ளார்.

அந்த போட்டியில் பெயர் பதிவு செய்த ஹரி கிருஷ்ணனின் 33 ஆம் எண் கொண்ட பனியனை பிடுங்கி, கண்ணன் என்பவர் அணிந்து விளையாடி முதல் பரிசான காரை பெற்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில், கோட்டாட்சியர் நடத்திய விசாரணையில் ஆள்மாறாட்டமும், மோசடியும் உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் 26 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும், முதல் பரிசை யாருக்கு கொடுப்பது என்பதை விழா கமிட்டியே முடிவு செய்யலாம் என்றும் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments