வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் கடுங்குளிர்: வெண் போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் பத்ரிநாத் கோயில்

0 867

வடமாநிலங்களில் நிலவும் கடுங் குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக, உத்தகரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் வெண் போர்வை போர்த்தியது போன்று காட்சியளிக்கிறது.

டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் தற்போது கடும்குளிர் நிலவி வருகிறது. அதேசமயம், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், காஷ்மீர் போன்ற மாநிலங்களிலும் பனிப் பொழிவு கடுமையாக உள்ளது. 

இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள பத்ரிநாத் கோவிலை பனி சூழ்ந்துள்ளது. கோவிலைச் சுற்றி அமைந்துள்ள ஷேஷ்னேத்ரா ( sheshanetra ) ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளும் உறைந்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments