தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 5250

தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு பனிமூட்டம் காணப்படுமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

காலை நேரத்தில் ஓரிரு இடங்களில் பனி மூட்டம் காணப்படுமென அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

29 ஆம் தேதி அன்று தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது. சென்னை நகரில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், காலை வேளைகளில் பனிமூட்டம் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments