தேர்தல் அறிவிப்புக்கு முன், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் சரிசெய்யப்படும் - தேர்தல் ஆணையம்

தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே வாக்காளர் பட்டியலிலுள்ள குளறுபடிகள் சரிசெய்யப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது
தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே வாக்காளர் பட்டியலிலுள்ள குளறுபடிகள் சரிசெய்யப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.
வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தோர் பெயர், முந்தையை தொகுதியின் வாக்காளர் பட்டியலில் நீக்கப்படாமல் உள்ளதாகவும், கடந்த தேர்தல்களில் ஏற்பட்ட குழப்பத்தை தவிர்க்கும் பொருட்டு, தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடப்பதை உறுதி செய்ய உத்தரவிடக் கோரியும் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது, பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் சரி செய்யப்படும் எனவும் தேர்தல் ஆணைய வழக்கறிஞர் உத்தரவாதம் அளித்ததை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
Comments