தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்த விவகாரம்: பொதுப்பணித்துறைத் தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட 4 பேர் தற்காலிகப் பணிநீக்கம்

தென்பெண்ணை ஆற்றின் தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டது தொடர்பாகத் தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் 4 பேரைப் பொதுப்பணித்துறைச் செயலர் தற்காலிகப் பணிநீக்கம் செய்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தளவானூர், கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம் இடையே தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்து நீர் வெளியேறியது.
இந்நிலையில் கட்டுமானப் பணியில் கவனக்குறைவாக இருந்ததற்காகப் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சுமதி, செயற்பொறியாளர் ஜவகர், கண்காணிப்புப் பொறியாளர் சுரேஷ், தலைமைப் பொறியாளர் அசோகன் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Comments