தடுப்பூசி போட ஆர்வம் குறைந்த பகுதிகளில் விழிப்புணர்வு நடவடிக்கை -சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன்

0 683
திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், அரியலூர், தூத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் குறைவாக உள்ளதாக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், அரியலூர், தூத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் குறைவாக உள்ளதாக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி இயக்கம் குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடன் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் காணொலியில் கலந்துரையாடினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சென்னை, மதுரை, கோவை, சேலம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்வோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகத் தெரிவித்தார். தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் குறைந்த மாவட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments