தமிழகத்தை இன்னும் புரிந்து கொள்ள விரும்புகிறேன் - ராகுல் காந்தி

0 1964
தமிழகத்தை இன்னும் புரிந்து கொள்ள விரும்புகிறேன் - ராகுல் காந்தி

தமிழகத்தை இன்னும் புரிந்து கொள்ள விரும்புவதால், 2ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்குறளை வாசிக்கத் தொடங்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 3-வது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, கரூர் பேருந்து நிலையம் அருகே காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் ராகுல் காந்திக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, வாங்கல் மாரி கவுண்டன் பாளையத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி, தமிழ் மொழியிலும், கலாச்சாரத்திலும் நம்பிக்கையும் சுயமரியாதையும் இரண்டற கலந்திருப்பதாக கூறினார். தமிழக மக்களின் கலாச்சாரத்தையும், உணர்வுகளையும் புரிந்து கொள்ள, திருக்குறளை படிப்பதை தவிர வேறு வழியில்லை என்றும் ராகுல் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments