3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 622
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பில், காலை நேரங்களில் தமிழகத்தின் சில இடங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் என கூறப்பட்டுள்ளது.

வருகிற 29-ம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் மட்டும் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனி மூட்டத்துடனும் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் பதிவாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments