டிம் பெயினின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்... சக வீரர்களுக்கு தண்ணீர் கொண்டு சென்றார் !

0 6520
தண்ணீர் கொண்டு செல்லும் டிம் பெயின்

இந்திய அணியிடம் தோற்று ஆறாத ரணத்துக்கு ஆளான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெயின் பிக் பேஷ் தொடரில் டிரிங்ஸ்மேனாக தண்ணீர் கொண்டு சென்றதால் சமூகவலைத்தளங்களில் கேலி பேசப்பட்டு வருகிறார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பார்டர் - கவாஸ்கர் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஆஸ்திரேலிய அணியின் கோட்டையாக கருதப்படும் பிரிஸ்பேனின் கப்பா மைதானத்திலேயே சிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்து வீழ்த்தியது போல இந்திய அணி தோற்கடித்தது . இதற்கு முன்னதாக , சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சீனியர் வீரர் அஸ்வினிடத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் மோதல் போக்கை கடைபிடித்தார். அப்போது, கேலியாக பேசிய டிம் பெயின், 'அடுத்த போட்டி கப்பால நடக்குது... அங்க வா...பார்த்துக்குறேன் ' என்றார். அஸ்வினிடத்தில் வம்பிழுக்கும் நோக்கத்திலேயே இருந்த டிம் பெயின், கேட்சுகளையும் கோட்டை விட்டார். இதனால், இந்த ஆளுக்கு வாய்தான் இருக்கு சரக்கு இல்லை என்றும் டிம் பெயின் விமர்சனத்துக்கு உள்ளானார்.

தொடர்ந்து, கப்பா டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற, 1988 - ஆம் ஆண்டுக்கு பிறகு பிரிஸ்பேனில் ஆஸ்திரேலிய அணி முதன் முறையாக தோல்வியை சந்தித்தது. இதனால், இந்தியாவிடம் டெஸ்ட் தொடரை கோட்டை விட்ட ஆஸ்திரேலிய கேப்டன் என்ற அவப்பெயரும் டிம் பெயினுக்கு கிடைத்தது. இந்த தோல்வியையடுத்து அஸ்வினிடத்தில் வம்பு இழுத்தற்காகாக அவரின் மனைவி பிரித்தி கூட டிம் பெயினை ட்ரோல் செய்து பழி தீர்த்துக் கொண்டார். இப்படி, தன் செயல்களால் பல முனைகளில் இருந்து விமர்சனத்தை எதிர்கெண்ட டிம் பெயினை பிக் பேஷ் )தொடரில் அவர் விளையாடி வரும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியும் ஆடும் லெவனில் சேர்க்கவில்லை.

இந்திய டெஸ்ட் தொடர் முடிந்ததும் நேராக பிக் பேஷ் தொடரில் பங்கேற்க சென்ற அவரை ஹோபர்ட்ஸ் ஹரிகேன்  அணி டிரிங்ஸ் மேனாக பயன்படுத்தியுளள்ளது. மெல்பர்னில் நேற்று நடந்த ஆட்டத்தில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியுடனான ஆட்டத்தின் போது, ஹோபர்ட்ஸ் ஹரிகேன் அணியின் சக பேட்ஸ்மேன்களுக்கு தண்ணீர் கொண்டு சென்ற டிம் பெயினை இந்திய ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர். தற்போது, 36 வயதான டிம் பெயினால் பிக் பேஷ் தொடரில் ஆடும் லெவனில் கூட இடம் பிடிக்க முடியவில்லையா... கேட்சைத்தான் கோட்டை விடுகிறீர்... தண்ணீர் பாட்டில்களையாவது ஒழுங்காக பிடிக்கவும் என்று டிம் பெயினை ட்ரோல் செய்கின்றனர். மேலும், யாரையும் கேலி பேசக் கூடாது... உலகம் உருண்டை என்பதே டிம் பெயின் இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டுமென்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில், டிம் பெயினின் ஈகோ பார்க்காத ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்புக்கும் பாராட்டு குவிந்து வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments