சேலம்: கோனேரிப்பட்டி காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் முதலமைச்சர் பங்கேற்று சுவாமி தரிசனம்

0 1202
சேலம்: கோனேரிப்பட்டி காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் முதலமைச்சர் பங்கேற்று சுவாமி தரிசனம்

சேலம் மாவட்டம் கோனேரிப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ ஓம் காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

70 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஓம் காளியம்மன் கோயில், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில், பங்கேற்க வந்த முதலமைச்சருக்கு பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

காவிரி ஆற்றிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் கலசத்தில் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. பின்னர், காளியம்மனுக்கும், விநாயகருக்கும் அபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments